Jul 10, 2006

எதோ ஒன்று குறையுதே!

புதுவை - காலை 4:30 மணி, என் செல்போனில் அலாரச்சத்தம். கண்ணாடியின்மீது போர்த்திய பனித்துளிகள் போன்று எனது கண்களில் மெல்ல உலகம் விழிக்கிறது.

"அட வென்று, நீ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி காலேஜ் செமஸ்டர் எக்சாமுக்கு படிக்கும்போதுகூட இவ்வளவு சீக்கிரம் எழுந்ததில்லையே! கடைசியா இந்த பாழாய்ப்போன சென்னைக்குப் போக இப்படி எழுந்த வேண்டியதாப் போச்சே" - மனம் எதையோ சொல்ல வந்தது...

நைட்டு வேர்ல்ட் கப் பைனல் மாட்ச்ச பார்த்துட்டு 2:30 மணிக்கு படுத்த நியாபகம் வேறு என் கண்களை சொக்கச்செய்தது. வேறு வழியில்லை 'முக்கால் தூக்கத்தோடு' குளிக்கப்போய் அரைத்தூக்கத்தோடு வெளியே வந்தேன்.

அம்மா கொடுத்த சூடான டீ என் அரைத்தூக்கத்தை கால்தூக்கமாக மாற்ற அப்படியே கொஞ்சம் சுறுசுறுப்படைந்து அப்பாவுடன் வண்டியில் பேருந்து நிலையம் நோக்கிச் செல்ல, அழகான தென்றல் காற்று மெதுவாய் என்னைத் தழுவ மீண்டும் சொக்கிப்போனேன்.

"விடியற்காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு மறுபடியும் தூங்கறதுலதான் என்னே சுகம்! "

அதிக நேரம் நீடிக்கவில்லை, இதோ பேருந்து நிலையம் :(
மணி 5:10, என்னடா இது? இப்ப டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ எல்லாம் பஸ் ஸ்டாண்ட்லேயெ ஆப்-காம்பஸ் வைக்க ஆரம்பிச்சுட்டாங்களா? தேரிழுக்க வந்த கூட்டம்போல பஸ் ஸ்டாண்டே களை கட்டியிருக்கு.இதோ ஒரேயொரு இ.சி.ஆர் பஸ் வருது. அட, ஒலிம்பிக்கில 'ஓடும் பஸ்ஸில் ஏறும் போட்டி' வைச்சா நமக்குத்தாண்டோய் எல்லா தங்கமும், பசங்க என்னமா எறுறானுங்க...

இப்பொழுது எனது தூக்கம் முழுவதுமாய் கலைந்து தங்கம் வாங்குவது எப்படி என்று யோசிக்கத் தொடங்கியது. அப்பொழுதுதான் கவனித்தேன் சற்று தொலைவில் இரு இ.சி.ஆர் பஸ்கள் நின்று கொண்டிருந்தன. கிட்டே சென்று ஒரு பெரியவரை விசாரித்தபோது அவர் சொன்னார் 'இதெல்லாம் ரிசர்வேஷன் சீட்டுப்பா'. அப்பாடா அப்ப கண்டிப்பா அடுத்த வாரம் ரிசர்வ் செய்திட வேண்டியதுதான், ஆனால் நேரத்துக்கு எழுந்தணுமே, முயற்சி பண்ண வேண்டியதுதான்.

எதேச்சையாய் திரும்பிப் பார்க்கையில், ஒரு இ.சி.ஆர் பஸ் ஜன்னலோரம்
இவள், கண்களை ஜன்னலின் மேற்கதவோரம் மறைத்தபடி என்னைப் பார்க்கின்றாள்.நீண்ட இடைவேளிக்குப் பிறகு சந்திப்பதால் நான் தானோ என்பதை உறுதி செய்து கொள்கிறாள் போலும்.

அவள்தானோ இவள் என்று எனக்குள்ளும் ஓர் சந்தேகம். அதற்கு காரணம் இருக்கிறது, சென்ற வாரம் எனது நண்பனை டைடல் பார்க்கில் விட்டுவிட்டு வரும்போது இவளைப் போன்றே ஒரு பெண் நடந்து செல்ல, நான் ஏமாந்துப் போனேன்.

சட்டென்று அவள் தனது முழுமுகத்தையும் உள்ளே மறைத்துக்கொள்ள எனது சந்தேகத்திற்கே இடமில்லாமல் போனது. எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் மனம் ஏனோ மயான அமைதியானது. ஒரு சிறு புன்முறுவல் பூத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்...

அதற்குமேல் அங்கிருந்தால் இருவருக்குமே சங்கடமென கருதி பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து, பி.ஆர்.டி.சி எனப்படும் பாண்டிச்சேரி அரசு வண்டி அலுவலகத்திற்கே சென்று சென்னைப் பேருந்தில் ஏறலாமென்று நின்றேன். அவன் ஒரு சென்னை வண்டியை கொண்டுவந்து நிறுத்த, மீண்டும் தங்க பதக்கம் நியாபகம் வர, அரக்க பரக்க அங்கு இருந்த எனது நண்பர்களோடு ஏறி சீட்டை பிடித்தேன், அவன் சாவகசமாய்ச் சொன்னான், 'பஸ் பஞ்சர் எல்லாம் கீழே இறங்குங்கள்'

இதோ இப்பொழுது அலுவலகத்தில் 1 மணி நேரம் தாமதமாய்... எதோ ஒன்று குறையுதே!




5 comments:

Manoj said...

machan, iruntalam nee ivalo descenta irunturuka koodathu. antah busleye poirukalame. ungaludaya pazhaya ninaivugal ( ah.. aaaah) ungala serthu vachurukume ... anyway nice blog.

Hariks said...

மனோஜ்! விகே என்ன உன்ன மாதிரியா ல்பி பின்னாலேயே சுத்தரதுக்கு?? ;)

எப்படியாவது அவங்கள சேர்த்து வையேண்டா!

KP said...

Really Good one :)

I'll see you on the street some other time
And all our words would just fall out of line
I was dreamin
Straight from the heart
-Bryan Adams

Karthik said...

VK, you're making me cry with this post. :(

Don't lock your love to one person, share with everyone :)

Yeah, waking up early, getting in and out of those crowded buses were terrible memories for me.

Karthigeyan said...

Manoj,
antha bus 'reservation bus'da, athula eppadi poga mudiyum

Muruga,
Yaarum ethuvum panna vendaam,
Manaoj'a paavam avana enda ithula izhukira

Jack,
I just made this post more humour than a serious one
I didnt feel sickened, iam normal