Aug 2, 2007

கவிஞன்

கவிஞன் நானொரு காலக்கணிதம்
கருபடு பொருளை உருப்பட வைப்பேன்
புவியில் யானோர் புகழுடை தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்

இவை சரியென்றால் இயம்புவது என்தொழில்
இவை தவறென்றால் எதிர்ப்பது என்வேலை
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும்
நானும் அவனுமே அறிந்தவை - அறிக...

-கண்ணதாசனின் அற்புத வரிகள், என் பாடபுத்தகத்தின் நினைவுகள் வழியே...

No comments: