Jul 26, 2007

the story of my new PC

நான்: ஒரு AMD 3200+ processor கொடுங்க. இந்த ப்ரோசசருக்கு என்ன மதர்போர்டு போட முடியும்?

கடைக்காரன்: .... (அவன் சொன்னதெல்லாம் எழுத முடியாது, நீங்களே எதையாவது நினைச்சுகுங்க)

நான்: MSI நல்லா இருக்குமா, அப்ப MSI மதர்போர்டே கொடுங்க, அந்த மதர்போர்டோட விடீயோ மெமரி எவ்வளவு?

கடைக்காரன்: ....
நான்: 128 MB'ஆ, ok

அடுத்து என்ன வாங்கனும்னு நினைச்சேன்...

நான்: ஆ.. 1 DVD Writer கொடுங்க - Serial -ATA (SATA) DVD drive தான் வேண்டும்,
ஹார்ட் டிஸ்க் IDE technologyla இருக்கும்போது, DVDயும் IDE'a இருந்தா ஸ்பீடா இருக்காதுன்னு இண்டிகா கம்ப்யூட்டர்காரன் சொன்னது நியாபகம் வந்தது.

கடைக்காரன்: ....
நான்: Sony'la மட்டும்தான் SATA-DVD இருக்கா, ஒகே. என்ன மெளலி, 1 GB RAM போடலாமா, இல்ல 512 MB போதுமா?

மெளலி: இன்னொருதடவ 512 MB போடப்போறியா?
நான்: (கடைக்காரனை நோக்கி) 1 GB RAM கொடுத்திடுங்க.

வேறென்ன ஒரேயொரு கேபினட் தான் பாக்கி....

ஆகமொத்தம் என்னோட பழைய ஹார்டிஸ்க தவிர பார்த்தா, ஒரு புது CPU'வே வாங்கியாச்சு. மேட்டர் என்னன்னா எல்லாம் பார்ட்ஸ் பார்ட்ஸா இருக்கு. ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியரா இருந்த என்ன கடைசியா ஒரு ஹார்ட்வேர் இஞ்சினியரா ஆக்கிபுட்டாங்க. எப்படியோ புத்தகத்த பார்த்து ஒருவழியா எல்லாத்தையும் கேபினட்டுக்குள்ள அடைச்சாச்சு, DVD-drive மட்டும்தான் உள்ள போகமாட்டேன் அடம்புடிச்சுது.

Cabinet Front Panel'a திறடா, ஈசியா உள்ள வச்சிடலாம்னு மனோஜ் சொல்ல, பையன் ஹார்ட்வேரிலும் பெரிய ஆளுபோலன்னு நினைச்சி மாங்கு மாங்குன்னு கஷ்டப்பட்டு ரெண்டு பேரும் சேர்ந்து திறக்க, அப்ப வந்த சிரினிவாசன் சும்மா ரெண்டு தட்டு தட்டி DVD'a உள்ள வைக்க, எங்க ரெண்டுபேரு முகத்தையும் கொஞ்சம் பார்க்கணுமே :)


எப்படியோ கடைசியா Windows XP media center'a போட்டு பார்த்தபோது ஒரு அழகிய மகிழ்ச்சி, நாமலே அசெம்பிள் பண்ணதாச்சே...

1 comment:

manoj said...

awesome .. good old memories :)