Oct 29, 2006

வல்லவன் - blog விமர்சனம்

முடிஞ்சா மதன்ஸ் திரைப்பார்வை ஸ்டைல படிங்க, முடியலன்னா சாதாரணமாவே படிங்க... சிம்பு கோவிச்சுக்க மாட்டார்.

வல்லவன் - சிம்பு தன்னை வல்லவன்னு நிரூபிக்க முதன்முதலா டைரக்ட் பண்ணியிருக்காரு. இதுல பாத்தீங்கன்னா... அவரு நம்மகிட்ட வல்லவன் நிரூபிக்கறதவிட நயந்தாரா, ரீமாசென், சந்தியாகிட்ட மன்மதன்னு நிரூபிக்கறதுலேயே குறியா இருந்திருக்காருன்னா அவரு எந்தளவு இந்த படத்த வெற்றிப்படமா ஆக்கனும்னு உழைச்சிருக்கார்னு நீங்க புரிஞ்சுக்கனும்

இதுவரைக்கும் டயலாக் பேசுறேன்கிற பேர்ல கையை சுத்தி சுத்தி பார்க்கவந்த ஆடியன்ஸ் தலய சுத்த வச்ச சிம்பு இதுல டைரக்ட் செய்யறேன்கிற பேர்ல காமிராவையே சுத்தி சுத்தி நம்ம மண்டைய பயங்கரமா சுத்த வைச்சிருக்கிறாரு.

ரீமாசென் சைக்கோவா இல்ல எல்லாப் பொண்ணுங்ககிட்டயும் அடிவாங்கற சிம்பு சைக்கோவான்னு அவன் அவன் இங்க மண்டைய பிச்சுக்க, இந்த படத்துக்கு டிக்கெட் வாங்கி மூணு மணிநேரம் பார்க்கற நீங்கதான்டா சைக்கோன்னு சிம்பு க்ளைமாக்ஸ்ல புரிய வைக்கிறது, தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல்முறைன்னுகூட சொல்லலாம். வல்லவன்... He
knows what to do...




இப்ப நடிப்புக்கு வருவோம், "ஒரு ஸ்டூடண்ட்டா ஒரு நண்பனா ஒரு பல்லனா ஒரு ஹீரோவா நம்ம சிம்பு பல வேடங்களில் வந்து தன் நடிப்புத்திறனை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். வல்லவன் - மன்மதனை மிஞ்சியவன்" அப்டீன்னு சன் டீவி திரைவிமர்சனத்துல தன்னைபத்தி சொல்லனும்னு சிம்பு இந்த படத்துல பயங்கரமா முயற்சி பண்ணியிருக்காரு. ஆனா அதுல பாத்தீங்கன்னா 25 வருட தேய்ஞ்சு போன கதையில இவர் பேசுற பஞ்ச் டயலாக்கும் அழுவற சீன்ல இவர் பண்ற ஓவர் ஆக்டிங்கும் அடடா தீபாவளி அதுவுமா இந்தபடத்துக்கா வந்தோம்னு நிறைய பேற அழவச்சிருப்பது அவர் திறமைய காட்டுது.

இந்த படத்துல முக்கியமான விசேஷம் என்னான்னா சாதரணமா பாட்டுக்குத்தான் தம் அடிக்க வெளியே போவாங்க, ஆனா இந்த படத்துல வர பில்டப் சீன் அதாவது சிம்புவோட மூக்கு காது வாய் அப்புறம் அவர் நொண்டி நொண்டி நடந்து வர சீன்லயே பல பேர் வெளியே போய் தம்மடிச்சிட்டு வந்து கரெக்டா படத்த சண்டையில இருந்து பார்க்கறது ரொம்ப
ஆச்சர்யமான விஷயம்.

கமல், ரஜினிய போல மட்டும் நடிக்காம தெலுங்கு பட ரைட்ஸ்சுக்கு அலையா அலைஞ்சுகிட்டு இருக்கும் நம்ம விஜய்ய போல அங்கங்க படத்துல நடிச்சு விஜய்க்கு கடும் போட்டியா உருவெடுத்திருக்காரு சிம்பு. பாவம் விஜய், ஏற்கனவே ஜெயம் ரவிக்கிட்ட தெலுங்கு பட ரைட்ஸ்சுக்கு போட்டி, இப்ப அவர் பண்ற ஒன்னு ரெண்டு ஸ்டைலுக்கும் சிம்புகிட்ட இருந்து போட்டி வந்திருக்கிறதுனால ரொம்ப நொந்துபோய் இருக்கிறதா எல்லாரும் சொல்றாங்க


ரோட்டோரம் சர்க்கஸ் வித்தை காட்றவன் எங்கே கூட்டம் கலைஞ்சிடுமோங்கற பயத்துல விதவிதமா சாகசம் செய்வானாம், அதேபோல நம்ம சிம்பு எங்கே மக்கள் படம் ஆரம்பிச்ச உடனே எழுஞ்சி போய்டுவாங்களோன்ற பயத்துல கண்டதையும் கலந்தடிச்சி ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது ரொம்ப எருமை, ஓ சாரி அருமை.

தமிழர்களின் கலாசாரத்தையும் பண்புகளையும் சிறிதும் விரசமில்லாமல் அழகா படம்பிடித்து காட்டியதற்காக எல்லாரும் சேர்ந்து சிம்பு தலையில ரெண்டு கொட்டு கொட்டலாம். ஏம்பா எங்கப்பா அந்த மருத்துவர்? நான் மனநல மருத்துவர சொல்லல, எல்லா இடத்திலயும் தமிழ்ல தான்
எழுதியிக்கனும்னு சண்டபோடுவாரே எதோஒரு மாக்கா கட்சி தலிவரு, அவரு கண்ணுக்குல்லாம் இந்த படம் தெரியாதோ? படத்தோட பேர் மட்டும் தமிழ்ல இருந்தா போதும் படம் எப்டிவேணுமானாலும் இருக்கலாம்னு நினைச்சிருப்பாரோ?

வல்லவன் - he knows what to do, only with Nayanthara & Reemasen

4 comments:

Karthik said...

Very Funny :-)

மு.கார்த்திகேயன் said...

ahaa..padaththai paakkalaamnu iruthen..hmm.. enga ponaalum padikkave mudiyaatha alavukku review podureengalE..

so sorry simbu..

good review karthik!!!

Bharani said...

Hey karthik...indha post oru fwd mail-la ulavikitu iruku...engayo poyiteenga...i will fwd the mail to u :)

MPS said...

Just went through all our friends blog. I really enjoyed the article . Quite interesting and so funny man. Keep the spirit and do give comments like this.