May 2, 2006

மனோஜ் ஜெயந்தி



ஜெயலலிதாவின் சிம்ம குரலில் வாசிக்கவும்:
இன்றைய பொன்னான தினமான மனோஜ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அனைத்து உ.பா. (உற்சாக பானம்) கடைகளும் (டாஸ்மாக் உட்பட) திறக்கப்பட்டு ஒவ்வொரு கடைக்கு வரும் முதல் தொன்னூற்றி ஒன்பது
வாடிக்கையாளர்களுக்கும் ஒரு காலி பீர் பாட்டில் இலவசமாக அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கின்றேன். உ.பா. கடையை திறக்காமல் குடிமகன்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதையும் திட்டவட்டமாக கூறிக்கொள்கிறேன்.

கருணாநிதியின் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த பொன்னான திட்டம் நிறைவேறினால் எங்கே மனோஜ் அவர்களின் வாக்கு அதிமுகவிற்கு சென்றுவிடும் என்ற பதட்டத்தில் சில இடங்களில் கடைகளை மூடச்சொல்லி ரகளையில் ஈடுபடுவதாக சிஐடி செய்தி வந்துள்ளதால், அனைத்து உ.பா.கடைகளுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கச்சொல்லி உத்தரவிட்டுள்ளேன். 'மனோஜ் அவர்களின் வாக்கு நமக்கே' என்று கூறிக்கொண்டு இத்துடன் எனது தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொள்கிறேன்.

இப்பொழுது பிரஸ்மீட்டில் கருணாநிதி...
பிரஸ்: ஜெயலலிதா 'மனோஜ் பிறந்தநாளையொட்டி' தமிழக மக்களுக்கு அளித்துள்ள சலுகைகள் பற்றி...

கருணாநிதியின் கஜினி குரலில் வாசிக்கவும்:

அன்பார்ந்த உடன்பிறப்புகளே! நான்கு வருடமாக மனோஜின் பிறந்தநாளை கொண்டாடாத இந்த அரசு திடீரென்று சலுகைகளை அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பே. இது ஒரு பித்தலாட்டம் என்பதை நீங்கள் 'உள்ளங்கை நெல்லிக்கனி' போல் அறிவீர்கள் என நானறிவேன்.

எனது தேர்தல் வாக்குறுதியாக 'இந்த திமுக அரசு பதவியேற்றால் மனோஜின் ஒவ்வொரு பிறந்தநாளன்றும் அனைத்து 'வருத்தப்படாத வாலிபர்களுக்கும்' ரூபாய் 2 மதிப்புள்ள 'கமர்கட்' மிட்டாய் ரூபாய் 1.50 காசுக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்பதையும், நான் வழங்கவுள்ள இலவச கலர்டீவியில், மனோஜின் படம் நாள்முழுவதும் சன்டீவி சானலில் காட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

எனது சிறந்த உடன்பிறப்பான மனோஜ், 'வை.கோ'வைப்போல் எனக்கு துரோகம் செய்யாமல், சரத்குமாரைப் போல் எனது காலை வாரிவிடாமல், சூரிய சின்னத்திற்கு வாக்களிப்பார் என்றும் நம்புகிறேன்.

2 comments:

KP said...

very creative and lively.U've got a good political sense of humor.

Hariks said...

நல்ல கற்பனை. இந்த மாதிரி கற்பனை தான் ஒரு Journalistukku தேவை.

கார்த்தி! நீ ஏன் Journalisatha ஒரு hobbya பண்ண கூடாது??