Oct 26, 2007

அண்ணே அண்ணே...

செந்தில் (செ): அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே நம்மஊரு நல்லஊரு இப்ப ரொம்ப கெட்டு போச்சுண்ணே..

கவுண்டமணி (க): டேய் கரிபால்டி தலையா, அப்படி என்னடா கெட்டு போச்சு

செ: பந்த் எல்லாம் நடக்குதுண்ணே, எதோ சேது சமுத்திர திட்டமா அத உடனே நிறைவேத்தணுமாம், அதுக்காக கடைய எல்லாம் மூட சொல்றது நியாயமாண்ணே?

க: டேய் பிஞ்ச தலையா, சேது சமுத்திரதிட்டம் மட்டும் முடிஞ்சுதுன்னா தூத்துக்குடிக்கும் சென்னைக்கும் கப்பல் போக்குவரத்து வேகமா இருக்கும்டா, அதனால தென்தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை கிடைக்கும்டா

செ: அதுக்காக ராமர போய் நம்ம முதல்வர் 'அவன் என்ன இஞ்சினியர் படிச்சிட்டா சேது பாலத்த கட்டினான், அவனே ஒரு குடிகாரன்'னு ஏண்ணே திட்டணும்

க: டேய், நேஷனல் ஐவேலதான் லாரிக போகமுடியாதபடி வழியமறிச்சு கோயில் கட்றீங்களேன்னு கடலுக்கு போனா, அங்கேயும் விடமா ஏண்டா உங்க ராமர கொண்டு வரீங்க? அப்படி அந்த கடல்ல புதைஞ்சுபோன பாலத்துக்கு மேல கோயில கட்டி என்னடா சாதிக்க போறீங்க? முதல்வராவது பரவாயில்ல ராமர ஒரு இஞ்சினியராதான் கேட்டாரு, நானா இருந்தேன் அவ்வளவுதான் மரியாதயா ஓடிபோயிடு...

செ: என்ன இருந்தாலும் ராமர போய்... பாலத்தை போய் இடிக்....
(கவுண்டமணி கோபமாய் தன்பக்கம் திரும்புவதைப் பார்த்து அப்படியே நிறுத்துகிறார்)

க: டேய் நீங்க மட்டும் நூறு வருஷமா சும்மா கிடந்த பாபர் மசூதிய இடிச்சு கோயில் கட்டுவோம்னு சவுண்ட் வுடும்போது நாங்க ஏண்டா ஒரு நல்ல காரியத்துக்காக லட்ச வருஷமா சும்மாகிடக்கிற சேதுபாலத்த இடிக்கக்கூடாது?

செ: என்ன இருந்தாலும் ராமர போய்...
(கவுண்டமணி கையில எதையோ எடுக்க)

செ: சரி அதவிடுங்கண்ண திமுகவ சேர்ந்த டி.ஆர்.பாலு தானே கப்பல்துறை அமைச்சரா இருக்கிறாரு. அவர்தானே சேது திட்டத்துக்கு பொறுப்பு, அப்படின்னா அத வேகமா முடிக்கறது அவர்கிட்டதான இருக்கு. அப்புறம் ஏன் அவங்களே 'சேது திட்டத்த வேகமாக முடிக்கக்கோரி பந்த்'னு நடத்துனாங்க, ஒண்ணுமே புரியலண்ணே.

க: எப்படிடா உன்பிஞ்சமண்ட இப்படிஎல்லாம் யோசிக்குதோ? இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா, அதெல்லாம் நீ கண்டுக்கப்புடாது. ஒரு நல்ல விசயத்துக்காக பல கெட்ட விசயங்கள் நடக்கறது தப்பே இல்ல, ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாதுன்னு பல குற்றவாளிகள தப்ப விடறதில்லையா அதப்போல.

செ: நீங்கதானே எதோ நல்ல விசயம் நல்ல விசயம்னு சொல்றீங்க. நம்ம நேவியில இருந்து ரிட்டய்ர்ட் ஆன ஒரு மெரைன் இஞ்சினியரோட சொன்னத கேட்டேன். அவர் 'இந்த சேதுசமுத்திரத் திட்டமெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாடி வந்திருந்தா பயனுள்ளதா இருக்கும் இப்ப அது நடைமுறைக்கு ஒத்து வராது'ன்னு சொல்றாரு. உதாரணத்துக்கு இவங்க
12அடி ஆழத்துக்கு சேதுசமுத்திரத்துல கால்வாய் அமைக்க போறாங்களாம், ஆனா பெரிய கப்பல்கள் போக 17அடியாவது இருக்கனுமாம், வேணும்னா நீங்களே இங்கபோய் இத (
http://www.rediff.com/news/2007/oct/01inter.htm) படிச்சுக்குங்க.

(கவுண்டமணி அதை படித்து கடுப்பாகி)


க: எனக்கு அங்க போய் 12அடிக்கு தோண்டறாங்களா இல்ல 17அடிக்கு தோண்டறாங்களான்னு பார்க்க முடியாது. ஆனா உனக்கு நான் இப்ப தரப்போற அடிய வேணும்னா எண்ணிப்பார்க்க முடியும். இந்தா வாங்கிக்கோ... இந்தா வாங்கிக்கோ... இந்தா வாங்கிக்கோ...


(அய்யோ அம்மா வலிக்குதே - செந்தில் ஒரே ஓட்டமாய் ஓட கவுண்டமணியும் பின்தொடர பேக்கிரவுண்ட்ல எதோ பாட்டு பாடுகிறது)

"அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே நம்மஊரு நல்லஊரு இப்ப ரொம்ப கெட்டு போச்சுண்ணே.."


1 comment:

Sriram said...

Dai give out the full article to the feed