நினைச்சுகூட பார்க்கல, ரஜினி படத்த (அதுவும் இந்தியாவின் மிக அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படத்த) இரண்டாவது நாளே லண்டன்ல பார்ப்பேன்னு.
சும்மா சொல்லக்கூடாது, சங்கர் ரஜினிய ட்ரில்லு வாங்கியிருக்காரு. எத்தனை கெட்டப்பு, எத்தன ஸ்டைலு... வாவ். சிவாஜி கணேசனா, எம்.ஜி.ஆரா, கமலா டான்ஸ் ஆடவச்சு ரஜினியோட சின்ன வயசு ஆசையை எல்லாம் நிறைவேற்றி வச்சிருக்காரு
ரஜினியும் அடிதூள் கிளப்பியிருக்காரு, என்னா ஃபைட்டு, பிரமாண்டத்த சங்கருக்கு சொல்லிதரணுமா என்ன? ஒவ்வொரு பாட்டும் சும்மா நச்சுனு எடுத்திருக்காரு. ஏ.ஆர்.ரகுமானுக்கும் பாட்டு செட்டுக்காகவுமே படத்த இன்னொருமுறை பார்க்கலாம்.
இப்ப ஸ்கிரீன்ப்ளே, கதைக்கு வருவோம்
சங்கர் தன்னோட வழியில் இருந்து கொஞ்சம் வெளியே வந்து டைரக்ட் பண்ணியிருக்காருன்னு சொல்லலாம். ரஜினி படத்துல அவர் காமெடி பண்ணலன்னா எப்படி? அதனால சீரியஸான கதைய ரஜினிக்காக காமெடி கலந்து கொஞ்சம் லைட்டா தந்திருக்கார்.
எப்போதும் அரசியல்வாதிகளை கிழிச்சு காட்டுற சங்கர், இந்த படத்துல (அதுவும் இந்த கதைக்கு) அவர்கள அவ்வளவா சீண்டாதது ஏன்னு தெரியல, ரஜினியோட அன்புக்கட்டளையோ?
ஆனா 'இந்தியன்' படத்துல மைல்கல்ல கூட மிஸ் பண்ணாத சங்கர், இந்த படத்துல மிகப்பெரிய ஓட்டைகள எப்படி கண்டுக்காம விட்டார்னு தெரியல. ஒரு வருஷத்துக்கு படம் எடுத்தா கதை மறந்திடுமா என்ன?
எது எப்படியோ தலைவர் படம், நம் இந்திய மக்களுக்கு ஒன்ன தெளிவா சொல்லியிருக்கு - 'பாலிவுட் மட்டும்தான் பெரிய பட்ஜெட் படங்கள பண்ண முடியும்கறது இல்ல - கோலிவுட், டாலிவுட், கோழிவுட்டாலகூட முடியும்னு'.

பேரச் சொன்னாலே சும்மா அதிருது இல்ல...
No comments:
Post a Comment