Apr 11, 2006

after a long time

சிறுவன்.கவிஞன்
-----------------------------

நினைவில் கவிதை - எழுதா பேனா
மெதுவாய் கரைய, கரையா 'மை'யினால்
கவிதை தொலைய சிந்திய கண்ணீர்
இதயம் உருகி 'மை'தனை கரைக்க
நினைவு திரும்ப - எழுதிய பேனா
சுகமாய் கவிஞன்! சிரித்த சிறுவன்!

-கார்த்திகேயன்
----------------

தமிழ் பாடநூலில் உள்ளதுபோல் கவிதையை விளக்குகிறேன்:

"இக்கவிதை கடைசி வரிவரையில் ஒரே கோர்வையாய் வரப்பெற்று, கடைசி வரியில் இருவேறு கவிதைகளாய் பிரிக்கப்பெற்றுள்ளது.

ஒவ்வொரு வரியிலும் முதல் இரு வார்த்தைகளை மட்டும் எடுத்துச்சேர்த்தால் 'கவிதையை தொலைத்த கவிஞனைப்பற்றியும்', பின் இரு வார்த்தைகளை மட்டும் எடுத்துச்சேர்த்தால் 'எழுதாத பேனாவினால் அழும் சிறுவனைப்பற்றியும்' சொல்லப்பட்டுள்ளது.

இது 'இரட்டுற மொழிதல்' போலில்லாமல் (ஒரே செய்யுள் இருவேறு பொருளைத் தருவது) ஒரே கவியில் இருவேறு கவிதைகள் உள்ளதால், இதை 'ஓரிரு மொழிதல்' என கவிஞர் (நான்தாங்கோ...) அழைக்கிறார்."

----------------

இப்பொழுது கீழ்காணும் வினாக்கு விடையளி:

"ஓரிரு மொழிதல் என்பது யாது? இதை உருவாக்கியவர் யார்? (5 மதிப்பெண்கள்)

ஒரே கவியில் இருவேறு கவிதைகள் வருமாறு புனைவது 'ஓரிரு மொழிதல்' எனப்படும்.
எடுத்துக்காட்டு:
நினைவில் கவிதை :: எழுதா பேனா
மெதுவாய் கரைய :: கரையா 'மை'யினால்
கவிதை தொலைய :: சிந்திய கண்ணீர்
இதயம் உருகி :: 'மை'தனை கரைக்க
நினைவு திரும்ப :: எழுதிய பேனா
சுகமாய் கவிஞன்! :: சிரித்த சிறுவன்!


இந்த நடையை உருவாக்கியவர் கார்த்திகேயன். இவர் திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்தவர் எனவும், சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளோடு துறவறம் பூண்டு கானகத்தில் வாழ்ந்தவர் எனவும் அறிஞர்கள் கூறுவர். இவரைப்பற்றிய முழுவிவரம் அறியப்படவில்லை."
----------------

அந்த காலத்திலேயே பிறந்திருக்கலாமோ? இந்த காலத்துப்பசங்க என்னைபற்றி இப்படி படித்துக்கொண்டிருப்பார்கள் :)

இந்த கணி(லி)யுலகத்தில் பிறந்ததால், இதை எனக்குத்தெரிந்த நான்கு நண்பர்களே படிப்பார்களா என்பது சந்தேகம் :) எதோ என்னால் முடிந்த தமிழ்ச்சேவை

வாழ்க தமிழ்! வளர்க வையகம்

4 comments:

Karthik said...

VK, I must say that this is something that adds a new dimension to poetry. A Masterpiece, I'd say. Long Live Tamil!

Hariks said...

Vk! Naan mattum TamilNadu education ministera irundhaen kandippa coming yearla indha paatta 10th bookla pottu, nee kodutha questiona public examla kekka vaipaen.

Ippadiyaavadhu thamizha azhiya vidama blogla valarpom.

Thamizh Vaazhga! :)

Karthigeyan said...

Thanks Jack, Muruga
உங்கள் ஆதரவிற்கு நன்றி

Manoj said...

உன் தமிழ் கவிதை மிகவும் நன்றாக உள்ளது.

Btw, ithukku yennala tamizh adikka mudiyala. rimba kazhtama irukku. ur kavithai is tooooo goooood. keep going.

-manoj
http://blogmanoj.blogspot.com