Apr 19, 2006

the new year trip

Some of the best achievements in my latest hometown trip...

  • renewed my five years old home PC with an ultimate BLACK one, the CPU being untouched aiming for VISTA release
  • Strictly informed my cousins - Siva, Vickey & Kiran, each to take 30 mins in the morning and in evening to play games in system, else they may spoil the new one in no time. Well, its easy to control Matrix's Agent Smith than these kids :)
  • met many of my relatives in a small family function
  • met my good old school friends Pugazh, Joseph Martin & Muthu Narayanan @ the beach
  • flew in GoAir & AirDeccan (previously only in Spicejet for Pongal)

and the worst ones are...

  • watched one of the worst film of tamil cinema : thirupathi. I still wonder how Perarasu got the director chance and could survive with his unworthy masala cinemas. Don't worry Ajith, you have Bala to bring back your fame :)
  • didn't spent good time in designing and making the site

Apr 11, 2006

after a long time

சிறுவன்.கவிஞன்
-----------------------------

நினைவில் கவிதை - எழுதா பேனா
மெதுவாய் கரைய, கரையா 'மை'யினால்
கவிதை தொலைய சிந்திய கண்ணீர்
இதயம் உருகி 'மை'தனை கரைக்க
நினைவு திரும்ப - எழுதிய பேனா
சுகமாய் கவிஞன்! சிரித்த சிறுவன்!

-கார்த்திகேயன்
----------------

தமிழ் பாடநூலில் உள்ளதுபோல் கவிதையை விளக்குகிறேன்:

"இக்கவிதை கடைசி வரிவரையில் ஒரே கோர்வையாய் வரப்பெற்று, கடைசி வரியில் இருவேறு கவிதைகளாய் பிரிக்கப்பெற்றுள்ளது.

ஒவ்வொரு வரியிலும் முதல் இரு வார்த்தைகளை மட்டும் எடுத்துச்சேர்த்தால் 'கவிதையை தொலைத்த கவிஞனைப்பற்றியும்', பின் இரு வார்த்தைகளை மட்டும் எடுத்துச்சேர்த்தால் 'எழுதாத பேனாவினால் அழும் சிறுவனைப்பற்றியும்' சொல்லப்பட்டுள்ளது.

இது 'இரட்டுற மொழிதல்' போலில்லாமல் (ஒரே செய்யுள் இருவேறு பொருளைத் தருவது) ஒரே கவியில் இருவேறு கவிதைகள் உள்ளதால், இதை 'ஓரிரு மொழிதல்' என கவிஞர் (நான்தாங்கோ...) அழைக்கிறார்."

----------------

இப்பொழுது கீழ்காணும் வினாக்கு விடையளி:

"ஓரிரு மொழிதல் என்பது யாது? இதை உருவாக்கியவர் யார்? (5 மதிப்பெண்கள்)

ஒரே கவியில் இருவேறு கவிதைகள் வருமாறு புனைவது 'ஓரிரு மொழிதல்' எனப்படும்.
எடுத்துக்காட்டு:
நினைவில் கவிதை :: எழுதா பேனா
மெதுவாய் கரைய :: கரையா 'மை'யினால்
கவிதை தொலைய :: சிந்திய கண்ணீர்
இதயம் உருகி :: 'மை'தனை கரைக்க
நினைவு திரும்ப :: எழுதிய பேனா
சுகமாய் கவிஞன்! :: சிரித்த சிறுவன்!


இந்த நடையை உருவாக்கியவர் கார்த்திகேயன். இவர் திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்தவர் எனவும், சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளோடு துறவறம் பூண்டு கானகத்தில் வாழ்ந்தவர் எனவும் அறிஞர்கள் கூறுவர். இவரைப்பற்றிய முழுவிவரம் அறியப்படவில்லை."
----------------

அந்த காலத்திலேயே பிறந்திருக்கலாமோ? இந்த காலத்துப்பசங்க என்னைபற்றி இப்படி படித்துக்கொண்டிருப்பார்கள் :)

இந்த கணி(லி)யுலகத்தில் பிறந்ததால், இதை எனக்குத்தெரிந்த நான்கு நண்பர்களே படிப்பார்களா என்பது சந்தேகம் :) எதோ என்னால் முடிந்த தமிழ்ச்சேவை

வாழ்க தமிழ்! வளர்க வையகம்

Apr 10, 2006

New AOL Explorer

If I can remember, i think AOL bought the Netscape and made it to sink.
But now they came up with an explorer powered by MS-Internet Explorer.
This one is really cool to view, tabbed , supports RSS feeds and shows screenshots of the pages we visit. But try to avoid keep it open for more than a day, u will face perf issues.

Have a look at it below

AOL Explorer

Apr 7, 2006

BarCamp


நம்மாளுங்க இங்க டீ-கடை பென்ஞ்ல உட்கார்ந்து அரட்டை அடிப்பது போல, அமேரிக்ககாரனுங்க பார்ல உட்கார்ந்து அரட்டை அடிப்பானுங்க போல

நம்மாளுங்க இங்க ஊர் கதை, வெட்டி கதையை பேசி நேரத்தை வீணடிப்பாங்க, ஆனா அவனுங்க இதை எப்படி உபயோகமா பயன்படுத்தறதுன்னு உட்கார்ந்து யோசிப்பானுங்களோ?

பார்கேம்ப்னு ஒன்ன கண்டுபிடிச்சி, பாப்புலர் ஆக்கிப்புட்டானுங்க.
சரி, அவனுங்க பார்ல கதையடிக்கறதுனால பார்கேம்ப்னு வச்சானுங்க.
நம்மாளுங்க ஏன் அதேபேயரையே வைக்கனும்ங்கறேன்?

அழகா, தீபாவளி பாட்டி சொல்றாப்ல நல்ல பேரு சாமி பேரா டீகேம்ப்னு வைக்கலாம்ல

Barcamp, sounds americanised, why not we indianise it as TeaCamp ?