யாதும் ஊரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே!
வாழ்தல் இனிதென மகிழ்தலும் இலமே
முனிவின் இன்னாது என்றலும் இலமே
மின்னொடு வானந் தண்துளி தலைஈ
ஆனாது கல்பொருது இறங்கும் மல்லற்
பேராற்று நீர்வழிப் படூஉம் புனைபோல்
ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது
திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆதலின்
மாட்சியில் பெரியோரை இகழ்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
- கணியன் பூங்குன்றனார்
From my good old memories :) and in thought of my transfer issue (see the heading)
For those who don't understand the meaning of the poem, kindly ask Mr.கணியன் பூங்குன்றனார். நாங்கல்லாம் மனப்பாடம் பண்ணி அடிச்சோம்ல!
குறிப்பு: கவிதை எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது, எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும்
Meanings:
கேளிர் - உறவினர்
வாரா - வாராது
அன்ன - போல (உவமை)
இலமே - கூடாது
முனிவு - துன்பம்
புனை - ஓடம்
திறவோர் - பெரியோர்
Well, i used eKalapai, a small tool but very useful for typing in tamil. The best feature it had is you can type in tamil as you spell in english. Look @ wikiTamil for more help
கவிதை பொருள்:
முதல் ஆறு வரிகள், தானே பொருள் தருவன.
அடுத்த நான்கு வரிகள்: மின்னலோடு வானிலே பொழிகின்ற மழைத்துளிகள், பாறை கற்களின் பின் தேங்கி, பெரிய ஆறாய் பாயும். அப்படிப் பாய்கின்ற ஆறிலே பயணிக்கின்ற ஓடமானது, ஆறின் வழியே செல்லும். அதுபோல், நமது வாழ்வும் விதியின் வழியே பயணிக்கும்
கடைசி மூன்று வரிகள், தானே பொருள் விளங்குவன