May 22, 2007

VK in UK

On thames in London eye


வெகுதூரம் வந்தேன்... முதல்+முதல்நாள் (=11th day) இன்று...

Apr 27, 2007

Please see... this moment is inevitable


எனக்கு தெரிந்தவரையில் 'யோகா' என்பது வாழ்க்கையை வெறுத்த சாமியார்கள் எல்லாம் காட்டுல போய் டைம்பாஸ்காக பண்றதுன்னு நினைச்சிருந்தேன். கடைசியா யோகா (பிராணயாமா) பத்தி என் எட்டாவது வகுப்புல படிச்சதா நியாபகம்.

என்னோட ஆஃபீஸ்ல பார்த்த இந்த வார்த்தைகள்தான் என்னை அவங்க கிளாஸ்க்கு இஷா யோகா போகலாமா வேணாமான்னு தோண வைச்சது. அப்பதான் என்னோட ரூமியும் (பாலா) இதுக்கு போயிருக்கிறான் தெரிந்தது.

நாமதான் ஒரு படத்துக்கு போறதுக்கு முன்னாடி, படம் நல்லா இருக்கா இல்லியான்னு கேட்டுட்டு போறவங்களாச்சே.. என்னடா போலாமான்னு அவன்கிட்ட கேட்டா - 'Dont expect anything or Expect the worst'ன்னு சொன்னான். இதகேட்ட பிறகு எவனாவது போவான்னா, ஆனாலும் நாங்க போவோமில்ல...

இப்பதான் வாழ்க்கையை தொலைத்த சாமியார்கள் யாருன்னு புரிஞ்சுது - வேற யாரு, நம்மல மாதிரி நரகத்துல சாரி நகரத்துல வாழ்றவங்கதான். யோகிகள் எல்லாம் தெளிவாத்தான் இருக்காங்க...

Apr 14, 2007

மயான கொள்ளை

காட்சி: நம்மூர் கோவில் திருவிழா... வீதியெங்கும் குழல் ஸ்பீக்கர் அலங்காரம்.. அம்மனுக்கே கட்-அவுட்

கோயில் பூசாரி மைக்கிலே அலறுகிறார்:
இன்னும் சற்று நேரத்திலே 'அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அங்காள தேவி பரமேஸ்வரி' வீதியுளா வர இருக்கின்ற காரணத்தினாலே பக்தர்களும் பக்த கோடிகளும் அலைகடலென திரண்டுவந்து அம்மன் அருளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதுசமயம் வீதியுளா முடிந்தவுடன் 'சினிமாப் புகழ்' சாதனைப் பறவைகளின் கலைக்கச்சேரி நடைபெறவுள்ளதால், மக்களனைவரும் அம்மன் தேரினை இழுக்க அலைகடலென திரண்டுவருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

பேச்சு நின்று பாடல் ஒலிக்கின்றது:
'அம்மா அம்மா ஆலயத்தம்மா பவானி தாயம்மா....' காது கிழிய.

சிறிது நேரத்திலேயே பாடல் நிறுத்தப்பட்டு, மீண்டும் பூசாரி குரல்:
எங்கப்பா பஞ்சாயத்துக்காரங்க (நம்ம மெளலி, கோபு, கிருஷ்ண திவாகர், மனோஜ்), அவங்க எதோ சொல்லனும்னு சொன்னாங்களே! அவங்களே இன்னும் கோயிலுக்கு வரலன்னா எப்படி மக்கள் வருவாங்க, எப்ப தேர எடுப்பாங்க. இங்கப்பாரு ஒருத்தரையும் காணோம்.

அரக்கபரக்க நம்ம பஞ்சாயத்துத் தலைவர் (யாருன்னு சொல்லத்தேவையில்ல) கோயிலுக்குச் சென்று மைக்கை பிடிக்கிறார்:
மைக் டெஸ்டிங் 1, 2, 3... ஆ ஒகே.அன்பான மக்களே, கடந்த மூன்று வருடங்களாக நம்மூரிலே 'மயானக் கொள்ளை' அம்மன் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டதைப்போல் இந்த வருடமும் 'மயானக் கொள்ளை' :) திருவிழா சிறப்பாக நடைபெற அனைவரும் கோயிலுக்கு வந்து தேரினை வடம்பிடித்து, அதுசமயம் நடைபெறவுள்ள கலைநிகழ்ச்சியை கண்டுகளிப்பதோடு நின்று விடாமல், கோயிலருகே சிறியதாக '6 அடி' உயரத்துக்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் தங்கள் காணிக்கையை மறக்காமல் செலுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

உண்டியலில் செலுத்தப்படுகின்ற காணிக்கையானது பஞ்சாயத்துக்காரக்களுக்கு பங்கு போடப்பட்டு :) மீதமுள்ள சொற்ப தொகை 'முகில்' எனும் தொண்டு நிறுவனத்துக்கு தாராளாமாக வழங்கப்படும் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதுசமயம் வெளி ஊர்களில் உள்ள அன்பு மக்கள், உண்டியல்வரை வந்து காணிக்கை செலுத்த முடியாததை உணர்ந்துள்ள பஞ்சாயத்துக்காரர்கள், அவர்களை நேரடியாக பஞ்சாயத்து கேஷியர் 'கோபு' அவர்களின் ஐசிஐசிஐ வங்கி கணக்குக்கு (000901528165) கடத்திவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஆ அவ்வளவுதான்... வாங்க எல்லாருமா சேர்ந்து தேரை இழுக்கலாம்..

-முற்றும்.

------------------

'நீ எடுத்த முடிவு தப்புன்னு தெரியும்போது அதை திருத்திக்க வாய்ப்பு, கிடைக்காமலேயே போகலாம்'
- 'மொழி' படத்தில் இருந்து...

(a reminder for my friends, in my way...)

Mar 5, 2007

2007 - Jan 4 to Mar 5

Jan 4 - Mar 5, என்னடா இவன் எதோ ரெண்டு மாசம் vacation போய்ட்டு ப்ரேக் எடுத்திட்டு வந்திருக்கான் நினைக்கிறீங்களா? எனக்குத்தான் தெரியும் நான் எவ்ளோ ப்ரேக் ப்ரேக்காகி வந்திருக்கேன்னு.

இந்த இரண்டு மாசத்துல எங்கே நான் தொலைந்துபோனேன்னு எனக்கே தெரியல. இப்ப மறுபடியும் ஐதராபாத். நிறைய வேதனைகள் நிறைய மாற்றங்களுடன்...

இததான் பெரியவங்க அந்த காலத்துலேயே என்ன சொல்லி இருக்காங்கன்னா

"தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன"


I thought of reanalysing myself but never remembered when i analysed myself before... :)

Dec 4, 2006

back to the basics


On my solo return journey, I met two indian researchers working for US govt., a TCSer & a Srilankan Ecology Professor. The most thrilling experience is with the bunch of Pakistanis who sat next to me in Dubai airport and opened a talk. They said they are on the way to Nairobi Muslim Conference, made my trip more thrilling and to stay on high alert until moving out from that place to catch my Chennai Air Emirates flight