Oct 30, 2006

இனிய நாள்

பிறந்தநாள் மணலில் சிறுசிறு மழைத்துளிகளாய்
உன்மெளன வாழ்த்துக்கள் முத்தமிட்டு நனைத்திட
சில்லிய மணலில் மெல்லிய மண்வாசனையில்
அயர்ந்து உறங்கும் என்இனிய நீண்டநாள்!

இந்திய இரவு 12:00 மணிக்கு ஆரம்பித்து அமேரிக்க இரவு 11:59 முடிந்த என் நீண்ட பிறந்தநாளை ஒரு கவிதை கொண்டும் என் நண்பர்களின் வாழ்த்துக்கள் கொண்டும் சிறப்பிக்கிறேன்

-கார்த்திகேயன்

Oct 29, 2006

வல்லவன் - blog விமர்சனம்

முடிஞ்சா மதன்ஸ் திரைப்பார்வை ஸ்டைல படிங்க, முடியலன்னா சாதாரணமாவே படிங்க... சிம்பு கோவிச்சுக்க மாட்டார்.

வல்லவன் - சிம்பு தன்னை வல்லவன்னு நிரூபிக்க முதன்முதலா டைரக்ட் பண்ணியிருக்காரு. இதுல பாத்தீங்கன்னா... அவரு நம்மகிட்ட வல்லவன் நிரூபிக்கறதவிட நயந்தாரா, ரீமாசென், சந்தியாகிட்ட மன்மதன்னு நிரூபிக்கறதுலேயே குறியா இருந்திருக்காருன்னா அவரு எந்தளவு இந்த படத்த வெற்றிப்படமா ஆக்கனும்னு உழைச்சிருக்கார்னு நீங்க புரிஞ்சுக்கனும்

இதுவரைக்கும் டயலாக் பேசுறேன்கிற பேர்ல கையை சுத்தி சுத்தி பார்க்கவந்த ஆடியன்ஸ் தலய சுத்த வச்ச சிம்பு இதுல டைரக்ட் செய்யறேன்கிற பேர்ல காமிராவையே சுத்தி சுத்தி நம்ம மண்டைய பயங்கரமா சுத்த வைச்சிருக்கிறாரு.

ரீமாசென் சைக்கோவா இல்ல எல்லாப் பொண்ணுங்ககிட்டயும் அடிவாங்கற சிம்பு சைக்கோவான்னு அவன் அவன் இங்க மண்டைய பிச்சுக்க, இந்த படத்துக்கு டிக்கெட் வாங்கி மூணு மணிநேரம் பார்க்கற நீங்கதான்டா சைக்கோன்னு சிம்பு க்ளைமாக்ஸ்ல புரிய வைக்கிறது, தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல்முறைன்னுகூட சொல்லலாம். வல்லவன்... He
knows what to do...




இப்ப நடிப்புக்கு வருவோம், "ஒரு ஸ்டூடண்ட்டா ஒரு நண்பனா ஒரு பல்லனா ஒரு ஹீரோவா நம்ம சிம்பு பல வேடங்களில் வந்து தன் நடிப்புத்திறனை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். வல்லவன் - மன்மதனை மிஞ்சியவன்" அப்டீன்னு சன் டீவி திரைவிமர்சனத்துல தன்னைபத்தி சொல்லனும்னு சிம்பு இந்த படத்துல பயங்கரமா முயற்சி பண்ணியிருக்காரு. ஆனா அதுல பாத்தீங்கன்னா 25 வருட தேய்ஞ்சு போன கதையில இவர் பேசுற பஞ்ச் டயலாக்கும் அழுவற சீன்ல இவர் பண்ற ஓவர் ஆக்டிங்கும் அடடா தீபாவளி அதுவுமா இந்தபடத்துக்கா வந்தோம்னு நிறைய பேற அழவச்சிருப்பது அவர் திறமைய காட்டுது.

இந்த படத்துல முக்கியமான விசேஷம் என்னான்னா சாதரணமா பாட்டுக்குத்தான் தம் அடிக்க வெளியே போவாங்க, ஆனா இந்த படத்துல வர பில்டப் சீன் அதாவது சிம்புவோட மூக்கு காது வாய் அப்புறம் அவர் நொண்டி நொண்டி நடந்து வர சீன்லயே பல பேர் வெளியே போய் தம்மடிச்சிட்டு வந்து கரெக்டா படத்த சண்டையில இருந்து பார்க்கறது ரொம்ப
ஆச்சர்யமான விஷயம்.

கமல், ரஜினிய போல மட்டும் நடிக்காம தெலுங்கு பட ரைட்ஸ்சுக்கு அலையா அலைஞ்சுகிட்டு இருக்கும் நம்ம விஜய்ய போல அங்கங்க படத்துல நடிச்சு விஜய்க்கு கடும் போட்டியா உருவெடுத்திருக்காரு சிம்பு. பாவம் விஜய், ஏற்கனவே ஜெயம் ரவிக்கிட்ட தெலுங்கு பட ரைட்ஸ்சுக்கு போட்டி, இப்ப அவர் பண்ற ஒன்னு ரெண்டு ஸ்டைலுக்கும் சிம்புகிட்ட இருந்து போட்டி வந்திருக்கிறதுனால ரொம்ப நொந்துபோய் இருக்கிறதா எல்லாரும் சொல்றாங்க


ரோட்டோரம் சர்க்கஸ் வித்தை காட்றவன் எங்கே கூட்டம் கலைஞ்சிடுமோங்கற பயத்துல விதவிதமா சாகசம் செய்வானாம், அதேபோல நம்ம சிம்பு எங்கே மக்கள் படம் ஆரம்பிச்ச உடனே எழுஞ்சி போய்டுவாங்களோன்ற பயத்துல கண்டதையும் கலந்தடிச்சி ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது ரொம்ப எருமை, ஓ சாரி அருமை.

தமிழர்களின் கலாசாரத்தையும் பண்புகளையும் சிறிதும் விரசமில்லாமல் அழகா படம்பிடித்து காட்டியதற்காக எல்லாரும் சேர்ந்து சிம்பு தலையில ரெண்டு கொட்டு கொட்டலாம். ஏம்பா எங்கப்பா அந்த மருத்துவர்? நான் மனநல மருத்துவர சொல்லல, எல்லா இடத்திலயும் தமிழ்ல தான்
எழுதியிக்கனும்னு சண்டபோடுவாரே எதோஒரு மாக்கா கட்சி தலிவரு, அவரு கண்ணுக்குல்லாம் இந்த படம் தெரியாதோ? படத்தோட பேர் மட்டும் தமிழ்ல இருந்தா போதும் படம் எப்டிவேணுமானாலும் இருக்கலாம்னு நினைச்சிருப்பாரோ?

வல்லவன் - he knows what to do, only with Nayanthara & Reemasen

Oct 22, 2006

கார்த்திகை ஐயனும் தீப ஒளியும்

கார்த்திகை + ஐயன் = கார்த்திகேயன் => Karthigeyan => Karthikeyan... Karthik

தீப + ஒளி = தீபவொளி => தீபாவளி => Deepavali => DeepaWali... Diwali


இப்படித்தான் வார்த்தைகள் உருமாறி போகின்றதோ?...

Oct 14, 2006

Let me be - SMK

Only very few people takes hobby in a professional way, and here's my gr8 friend who made his hobby 'singing' and entertaining. Hear to his latest song that rocks...




Happy Birthday Jack!

Rewind: I still remember that i quoted my hobby as working with digital music in softwares such as GoldWave, ACID express along with Jack, One of my reason for getting selected in TCS :)

Oct 10, 2006

The World Clock

We all have friends in differenct locations of the world. Here is a small tip to have the clocks of the worlds cities @ your desktop so you may call them for voice chat at the wrong time :) ...



1. Go to http://widgets.yahoo.com/, download and install it

2. You will find many useful widgets in the 'My Widgets' folder

3. To get the world clock showing different cities's time around the world, you should download 'World Clock Pro' widget

4. Go to http://widgets.yahoo.com/gallery/view.php?widget=36128 and download it

5. Double Click on the 'World Clock Pro.widget' to open the analog clock. Also have a look at the license.txt (thats a good practise we never follow :)

6. Now a single click on the clock opens 3 options, clicking on the + sign opens a new clock (expect a delay)





Just play around to get what you want in it...

Oct 8, 2006

google code search

சரி நம்ம கூகுள்கிட்ட இருந்து புதுசா வந்திருக்கே, நம்ம ப்லாக்ல போடறதுக்கு முன்னாடி யாராவது எழுதியிக்காங்களான்னு பார்த்தா, வந்த இரண்டே நாள்ல ஒரு உலகமே அதப்பத்தி எழுதி இருக்கு :-#{0%

இதுல இவன் என்னடான்னா 'கூகுல் கோட் ஸர்ச்ல எனக்கு பிடிச்சது ரெகுலர் எக்ஸ்பிரஷ்சன்னு' சொல்றான் (டேய் அப்டீன்னா என்னாடா?), இவன் என்னடான்னா 'நான் பாஸ்வேர்ட் கோட கண்டுபிடிசிட்டேனேன் கத்துறான்'. இதெல்லாம்கூட பரவாயில்ல, இவனோட ஆராய்ச்சிய நான் எப்படி சொல்றதுன்னே தெரியல.

இதோப்பாருடா கூகுளுக்கு வந்த வாழ்வ?
நான் பார்த்து வளர்ந்த பையன் (சத்தியமாங்க, நான் ஸ்கூல்ல படிக்கிற காலத்திலேயே பார்த்திருக்கேன் :) என்னமா முன்னேறியிருக்கான்...





கொசுறு செய்தி(விஜய் ஸ்டைல்ல):
ண்னா... ஆனா நம்ம கூகுள் தல என்ன முடிவெடுத்திருக்காருன்னா சும்மா வாராவாரம் ஒரு வித்தைய காட்றத நிறுத்திட்டு, எல்லாத்தையும் ஒன்னா சேர்த்து (விஜய் எப்படி தெலுங்கு படத்தோட காப்பிரைட்ஸ்ஸ ஒன்னா வாங்குறாரோ, அதேப்போல) கலக்கலாம்னு முடிவு பண்ணி இருக்காரு. அத இங்க இங்க... இங்க படிங்க னா...

Oct 2, 2006

Interesting story...

Sometime in early 2000 Arlo Rose came up with an idea for a cool little application. It would use XML to structure images, and a scriptable language, like Perl, in such a way that someone who knew the basics of Perl could put together cool little mini-applications. The goal was that these mini-applications would just sit around on your desktop looking pretty, while providing useful feedback.

All he ever really wanted was to have a cool looking battery monitor and something that told him the weather, but he knew the possibilities for something like this could potentially be limitless.

Fast forward a couple of years when Arlo began working with Perry Clarke at Sun Microsystems. Over lunch one afternoon Arlo gave Perry the basics of this dream app. Perry suggested that JavaScript would be far easier for people to digest. He was right. It's the basis for Flash's ActionScript, and Adobe's scripting engine for Photoshop. Of all the choices, JavaScript made the most sense. Shortly after that lunch, the two began to spend their nights and weekends making this thing a reality.

Look down to look what it is in my desktop...